முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்க்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்து விட்டு வெளியேறினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியே வந்த நாமல் ராஜபக்க்ஷ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
"வழக்கமாக, நமது நாட்டின் அரசியல் கலாசாரம், மற்றைய அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து, ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அவர்களைக் கேள்வி கேட்கிறது, எங்களை வரக்கூறிந்தால் நாங்கள் வருகிறோம்,
2010 - 2015 காலப்பகுதியில் பெறப்பட்ட நிதி தொடர்பான அநாமதேய முறைப்பாடு குறித்து இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.