முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவரின் பிரத்தியேக செயலாளரைக் கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றதாக கடுகண்ணாவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணித் தகராறில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெனிக்திவெல பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்து மூன்று வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகண்ணாவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.