இலங்கையில் தங்கியுள்ள இஸ்ரேல்
பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 19 – 23 ஆம் திகதிகளுக்கு இடையில் பொத்துவில் அறுகம்பே பகுதியில் தங்கியிருக்கும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்திருந்தன.
இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கில் வாழ்பவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சில காலத்துக்கு முன்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர் என விசாரணைக் குழுக்கள் கண்டறிந்துள்ளன.
தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 50 இலட்சம் ரூபா பணம் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தத் திட்டம் தெரியவந்தவுடன், உடனடியாகச் செயற்பட்ட பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் எதிர்வரும் 22ஆம் திகதிக்குள் அறுகம்பை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பைப் ஏற்பாடு செய்திருந்தனர்.
அறுகம்பக கடற்கரை சறுக்கல் விளையாட்டுக்கு ஏற்றதாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது மற்றும் இஸ்ரேலியர்கள் அந்த விளையாட்டை மிகவும் விரும்புகிறார்கள், எனவே இந்த நாட்டுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்கள் வழக்கமாக அருகம்பை பகுதிக்கு செல்வார்கள்.
இதற்கிடையில், அப்பகுதியில் இஸ்ரேலியர்களுக்கு சொந்தமான பல சுற்றுலா கட்டிடங்கள் உள்ளதாகவும், அந்த அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு இஸ்ரேலியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் என பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்