பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் ரவி செனவிரத்னவின் கீழ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்ன சந்தேக நபராக குறிப்பிடப்பட்டமையால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான மூன்று ஆணைக்குழு அறிக்கைகளையும் வரவழைத்து விசாரணைகளில் தலையிடுமாறும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பி அறிக்கை தொடர்பான ஆவணங்களை ஒருவர் பெற்றுக் கொண்ட விதம் பிரச்சினைக்குரியது எனவும் அதில் திருப்திப்பட முடியாது எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் தலையிடுமாறு கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.
மனு ஒன்றை தாக்கல் செய்து இந்தக் கோரிக்கையை முன்வைத்த சட்டத்தரணி, தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோரியுள்ளார்.