இலங்கையில் ஊடகவியலாளர்கள்
படுகொலைகள் மற்றும் காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணைக்கு முல்லைத்தீவு பத்திரிகையாளர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதன் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக, தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்புகளை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
2004 முதல் 2009 வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 48க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களில் 41 தமிழர்களும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
முல்லைத்தீவு செய்தியாளர் சங்கம், கொலைகள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறல் இல்லாமையானது தண்டனையிலிருந்து விடுபடும் கலாச்சாரத்துக்கு இடமளிக்கிறது, "குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் செயற்பட அனுமதிக்கிறது என தெரிவித்துள்ளது.