எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் இன்று (23)  உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஜனநாயக தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்புமனுக்கள் தெரிவத்தாட்சி அதிகாரியால் ஏற்கப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதேவேளை பொதுத் தேர்தலுக்காக கொழும்பு மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி சமூக ஊடக ஆர்வலர் அஷேன் சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி