பொத்துவில், அறுகம்பே

பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்போது, ​​ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
இஸ்ரேலியர்கள் அறுகம்பே பகுதிக்கு அடிக்கடி ஈர்க்கப்படுகிறார்கள். இவர்கள் பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதியில் சர்ஃபிங் (Surfing season) செய்வதால் அந்தப் பகுதியை விரும்புகிறார்கள். 
 
அதனால்  அங்கு செல்லும் இஸ்ரேலியர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என சில தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, அறுகம்பை தொடர்பான அமெரிக்காவின் பயண எச்சரிக்கையை மேற்கோள் காட்டி இலங்கைக்கான தமது பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி