இரத்மலானை ரயில்வே தளத்தில்
இன்று (23) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ரயில்வே சொத்துக்களைத் திருடுவதற்காக ரயில்வே தளத்துக்குள் பிரவேசித்த ஐவர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் சந்தேக
நபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களின் தாக்குதலால் காயமடைந்த ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.