முன்னாள்  நாடாளுமன்ற

உறுப்பினர்  உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையுடன நாடகமாகிறார்.

அவரது இந்த நாடகம் வெற்றியடைகிறதா தோல்வியடைகிறதா? என்பதனை எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ள முடியும் என ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.
 
உதய கம்மன்பில ஈஸ்டர் விசாரணைக் குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய போதே சீலரதன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இவ்வாறானவர்கள் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவானால் பெரும் அழிவு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
“கிளைக்குக் கிளை தாவுபவர்கள் பைத்தியக்காரர்கள். ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பாக இப்போது எல்லோரும் அலறுகிறார்கள். இதனால் அந்த மக்கள் நிவாரணம் பெற முடியுமா? 
 
தற்போது கம்மன்பில தன்னிடம் தேவையான ஆவணங்கள் இருப்பதாக கூறுகிறார். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கும்போது ஏன் இவற்றைக் கூறவில்லை? இந்த ஆவணங்கள் அப்போது கொடுக்கப்படவில்லையா? 
 
இவரின் இந்த நடிப்புக்கு பின்னால் ஓர் இயக்குனர் இருக்கிறார். வழிநடத்தும் குழுவும் இருக்க வேண்டும். நடிப்பு வெற்றியா இல்லையா என்று பார்ப்போம். தவறினால் கல்லெறியப்படுவார் என தேரர் தெரிவித்தார்.
 
 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி