கண்டி, அனிவத்த பகுதியில்

உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த BMW ரக கார் மற்றும் பெஜேரோ ரக ஜீப் ஆகியவற்றை கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுருத்த பண்டாரநாயக்கவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க தலைமையிலான பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குழுவினர் அணிவத்தையில் உள்ள வீடு ஒன்றின்  கராஜை சோதனையிட்ட போது, ​​இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வானங்களையும் கைப்பற்றினர்.

இந்த இரண்டு வாகனங்கள தொடர்பிலும் வீட்டில் உள்ளவர்கள் யாரும் சட்டபூர்வமாக உரிமை கோர முடியாத காரணத்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த இரண்டு கார்களும் துறைமுகத்தில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி