சிலாபம் , சிங்கபுர பகுதியில்

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியரும் அவர்களது மகளும் உயிரிழந்த சம்பவம் கொலையாக இருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது .

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர் .
 
நேற்று முன்தினமிரவு  (19) இரவு வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
தீயை அணைத்த பின்னர், விசாரணை அதிகாரிகள் வீட்டில் மூவரின் சடலங்களைக் மீட்டனர். இறந்தவர்கள் 51 வயதான தந்தை , 44 வயது தாய் மற்றும் அவர்களின் 15 வயது மகள் என அடையாளம் காணப்பட்டனர் .
 
தாயின் சடலம் படுக்கையறையில் படுக்கையில் காணப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
 
மேலும், வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன .
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி