தமது சிறப்புரிமைகள் குறைக்கப்படுவதற்கு

எதிராக குரல் எழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதிகள் தலைமையில் முன்னணி ஒன்றை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில், தனிப்பட்ட முறையில் போராடுவதை விட, கூட்டாகச் செயற்படுவது பலனளிக்கும் என முன்னாள் ஜனாதிபதிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரிந்ததே.
 
பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்த அறிவார்ந்த கலந்துரையாடலில் பல ஜனாதிபதிகள் கலந்துகொண்டு நாட்டின் பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பல முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே தமது சிறப்புரிமைகளை குறைப்பதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவிடம் முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே இந்த விடயத்தை முன்வைத்துள்ளனர்.
 
வாழ்வதற்குரிய சிரமங்கள் தொடர்பான பெரும்பாலான விடயங்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
 
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசதிகள் அதிகம் என்ற சமூகப் பேச்சு காரணமாகவே அரசாங்கம் இந்த மூவரடங்கிய குழுவை நியமித்தது.
 
குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கவுள்ளது.
 
எனினும், சலுகைகள் குறைக்கப்படுமாயின், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பான சட்டமூலத்தில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி