தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குருந்துகஹ மற்றும் வெலிப்பன்ன வீதிகளுக்கு இடையில் 66 ஆவது கிலோமீற்றர் கல்லுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலியில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வாகனம் ஒன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டு வீதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி