பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான
மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரான சட்டத்தரணி உதுல் பிரேமரத்னவையும் யுவதி ஒருவரையும் தலவத்துகொட பிரதேசத்தில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, உணவகம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவெல பதில் நீதவான் சந்தியா தல்துவ தலங்கம பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன ஜே.வி.பி.யின் அரசியல் குழுவில் பணியாற்றிய காலப் பகுதியில், தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், தாக்குதலுக்கு உள்ளானார். இவருடன் யுவதி ஒருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான தசுன் சில்வா மற்றும் சஜித் குணசேகர ஆகியோர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான எமது கட்சிக்காரரான சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன ஜனதா விமுக்தி பெரமுனவின் முன்னாள் அரசியல் குழு உறுப்பினர்.
ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளராக செயற்பட்டார் என் அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.