பாணந்துறை பிரதேசத்தில் உள்ள
வீடொன்றில் ஆண் மற்றும் பெண் இருவரின் சடலங்களை இன்று (15) பாணந்துறை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர
இவர்கள் திருமணமாகாத தம்பதிகள் எனவும், இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக 47 வயதுடைய நபரே 42 வயதுடைய பெண்ணைக் கொன்று கழுத்தை நெரித்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு 16 வயது மகனும் 23 வயது திருமணமான மகளும் உள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு இலங்கை திரும்பிய இவர், வீட்டில் இருந்தே சுயதொழிலாக கடைகளுக்கு தைத்த துணிப்பைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் தொழிலை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.