2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால் தேர்தலுக்கு தேவையான பணத்தை திறைசேரியில் இருந்து விடுவிக்க கடமைப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

“எப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், அன்றிலிருந்து 52 முதல் 66 நாட்களுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், வேட்புமனுக்கள் எப்போது ஏற்றுக் கொள்ளப்படும், தேர்தல் எப்போது நடத்தப்படும்? மேலும் நாடாளுமன்றம் எப்போது மீண்டும் கூடும்? என்று இந்த மூன்று விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட பின்னரே பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் சட்ட ரீதியாக பேச முடியும்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பணம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் எப்படியாவது ஜனாதிபதி தமக்கு உள்ள அதிகாரத்தின் படி பாராளுமன்றத்தை கலைத்து விட்டால், கலைப்பு அறிவிப்புடன் திறைசேரியில் இருந்து தேர்தலுக்கான பணத்தையும் கொடுக்க அவர் கட்டுப்பட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஒரு தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி