ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்
சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இன்று (12) நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தொடர்பாக நீண்ட காலமாக தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. தேசிய மக்கள் சக்தி ஆட்சி உருவான பின் பக்தர்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.
“அந்தவகையில், நான் வைத்த முன்மொழிவின்படி, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் தீர்மானத்தின்படி இன்று முதல் ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்வு இது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார்.