அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது  இப்போது நாடும் நாட்டு மக்களும் பெரும் ஆபத்தில் உள்ளனர் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன கூறுகிறார்

.இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கும்போது

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாமல் தடுக்க எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்கும் பலமுறை ஜனாதிபதிக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது  பற்றி நாங்கள் ஆலோசனை கூறினோம் ஆனால் அவற்றை அவர்கள் கவனத்தில் கொள்ளாது தேர்தலுக்கான வேலைகளில் ஈ டுபட்டுக் கொண்டிருந்தனர்  அதனால் இப்போது நாட்டையும் மக்களையும் பாரிய கஸ்டத்தில் தள்ளியுள்ளனர்.

இன்றைய நிலைமை:

மேலும் 10 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மாலை 4.00 மணியளவில் 567 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வெலிசர கடற்படை முகாமில்180 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொற்றாளர்களில் 68 பேர் விடுமுறையிலும் 112 பேர் முகாமிலும் உள்ளதாக ராணுவத் தளபதி தெரிவித்தார்.

நாட்டின் 21 சுகாதார மாவட்டங்களில் இருந்து மொத்தம் 21 கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவு, நாட்டில் 26 சுகாதார மாவட்டங்கள் உள்ளன, அவற்றில் 21 மாவட்டங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களிலிருந்து எந்த நோயாளிகளும் பதிவாகவில்லை  என்று அறியக்கிடைக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார் .

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி