கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்

பெருக்கு மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இரண்டு நாட்களில் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மரணங்களில் நான்கு சிறுமிகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உட்பட மூவரும் மற்றொரு பெண்ணும் தெய்ந்தர பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர்.
 
மேலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் இரு சகோதரிகள், எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த சிறுமி, எலபாத்தையைச் சேர்ந்த யுவதி, அயகம மற்றும் கிரியெல்ல பிரதேசங்களைச் சேர்ந்த இருவரும், கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயும் கடந்த 48 மணித்தியாலங்களில் அனர்த்தங்களினால் உயிரிழந்துள்ளனர். 
 
மேலும், ஐவரைக் காணவில்லை என்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அனர்த்த நிலையம் கூறுகிறது.
 
சீரற்ற காலநிலை காரணமாக 177 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி