எம்.எஸ்.எம்.ஸாகிர்
---------------------------

முன்னாள் உயர்கல்விப் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின்

புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) மாலை 4 மணிக்கு மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம், வர்த்தக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் றிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ. எல்.எம். ஐயூப்கானின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

றிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டக் குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இவ்விழாவில், அரசியல்வாதிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊர்ப் பிரமுகர்கள், வர்த்தகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி