வடக்கிலும் தெற்கிலும் முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்தவர்களையும் 

காணாமல் போனவர்களையும்  நினைவு கூரும் நிகழ்வு கொழும்பு 7, விஹார மகாதேவி பூங்காவில்  இடம்பெற்றது.வடக்கிலும் தெற்கிலும் முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்தவர்களையும்  காணாமல் போனவர்களையும்  நினைவு கூரும் நிகழ்வு கொழும்பு 7, விஹார மகாதேவி பூங்காவில்  இடம்பெற்றது.

வடக்கையும் தெற்கையும் தனித்தனியாகப் பிரித்து நினைவு கூராமல் உயிரிழந்த  அனைவரையும் ஒன்றாக நினைவு கூர்ந்து, வென்ற அமைதியை மேலும் பாதுகாத்து ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்வது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம், குளோபல் தமிழ் மன்றம், கொழும்பு இளம் பௌத்த சங்கம், யாழ்ப்பாணம்  செல்வநாயகம் அறக்கட்டளை, தர்மசக்தி அமைப்பு, சங்கம்  போன்ற அமைப்புக்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தன.

முக்கிய உரைகளை கொழும்பு இளம் பௌத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜெயசேகர மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வநாயகம் அறக்கட்டளையின் பணிப்பாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆற்றினர்.

இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சிறிபால அமரசிங்க உட்பட பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட அலுவலகத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பிரதான ஆலோசகர் Patrick McCarthy இராஜதந்திர மட்டத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டார்.  

மஹா சங்கத்தினர்  ஏராளமான கத்தோலிக்க, இந்து,  இஸ்லாமிய மதகுருமார்கள் மற்றும் சுவிஸ் தூதர் மற்றும் ஊழியர்கள், ஜப்பானிய தூதரகத்தின் பிரதிநிதிகள், அமெரிக்க தூதரக பிரதிநிதிகள், தாய்மார்கள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு மக்கள், ஒன்று கூடினர். இறந்தவர்களின் நினைவாக தீபம் ஏற்றினர்.

VP 1


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி