ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் ஒருவர் இலஞ்சம் கோரியமை

மற்றும் புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர்  இது தொடர்பில்  பதிவிட்டமை குறித்து இலஞ்ச ஊழல்கள் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு  எழுத்து மூலம் அறிவித்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர்களிடம்  இலஞ்சம் கேட்கும் நிலைக்கு ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்கள் முன்னேற்றமடைந்துள்ளனர் என பிரதேச செயலாளர் தனது முகநூல் பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊடகப் பணிப்பாளர் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதுடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவராமல்  சமூக ஊடகங்களில்  பதிவுகளை வெளியிட்டமைக்கு எதிராக பிரதேச செயலாளரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி