leader eng

49 வது ஏப்ரல் வீரர்கள் நினைவு தினமான இன்று 5 மக்கள் விடுதலை முன்னணியின் நேரடி நிகழ்ச்சி காலை 10 மணிக்கும் மு.சோ.க நேரடி ஒளிபரப்பு பி.ப 3 மணிக்கும் face book இல் ஒளிபரப்பப்படவுள்ளது.

இன்று 5ம் திகதி ஏப்ரல் வீரர்களின் 49 வது நினைவு தினம் இடம்பெறுகிறது இந்த நினைவுதினத்தில் முன்னிலை சோஷலிச கட்சி ஏற்பாடு செய்துள்ள நேரடி நிகழ்வு இன்று பி.ப 3 மணிக்கு இடம்பெறவுள்ளது இந்நிகழ்வு சம்பந்தமாக முன்னிலை சோஷலிச கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று நாம் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் நாம் இருக்கின்றோம் இந்த வைரஸை நிச்சயம் நாம் தோற்கடிக்க வேண்டும். இதிலிருந்து நாம் அனைவரும் விடுதலையாக வேண்டும் இந்த வேலையில் மக்களுக்கு நாம் கூறிக்கொள்ள செய்தி ஒன்று உள்ளது இந்த கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகப்பிரச்சினைக்கும் சோசலிசமே தீர்வாகும் என்பதாகும்.

இன்று துயரத்தில் இருக்கும் மக்களை நாம் விடுவித்தாக வேண்டும். இதே போன்றொரு நாளில்தான் 1971 ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி  எங்களது தோழர்கள் இந்த சமூக அமைப்பை மாற்ற வேண்டும் என்று போராடி அவர்களது பெறுமதி வாய்ந்த உயிரையும் இழக்க நேரிட்டது எமது தோழர்களின் தியாகத்தை எங்களால் என்றுமே மறக்க முடியாது நாங்கள் சோசலிசத்தை அடையும் வரை போராடுவோம் என அந்த ஊடக அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி