2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்
அறிவித்துள்ளது.
இந்தப் பெறுபேறுகள் மூலம் 1,49,964 பாடசாலைப் பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.