ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், ஊடகவியலாளர் குமணனுக்கு தற்பொழுது விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக கடந்த வருடம் குறித்த ஊடகவியலாளரின் தாய் மற்றும் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படாத நிலையில் மீண்டும் தற்போது விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களை வைத்தே விசாரணைக்கு அழைக்கப்படுவதாக ஊடகவியலாளர் தரப்பில் கூறப்படுகின்றது.
குறித்த ஊடகவியலாளர் தொடர்ச்சியாக செம்மணி தொடர்பான விடயங்களை சமூகத்திற்கு தெரியப்படுத்தி வரும் நிலையில் இவ்வாறான சுயாதீன ஊடகவியாளர்கள் மீது பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை ஏற்க முடியா என பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.