சுமார் 1,500 பக்கங்கள் அடங்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் ஆவணம்,

ஜனாதிபதிச் செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை கணினியில் திறக்க முடியாமலுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால், இது பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோவிடம் கேட்டபோது, ​​ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, குறுந்தகடு வடிவில் கிடைத்துள்ளதாகவும், சுமார் 1500 பக்கங்கள் அடங்கிய அந்த ஆவணத்தைத் திறக்கமுடியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் வினவியபோது கருத்துத் தெரிவித்த அவர், ​​குறித்த குறுந்தகடுகளில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது தொடர்பில் தமக்குத் தெரியாதென்று கூறினார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி