இந்திய மீனவர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து

செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண குடாப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு மீனவர்கள் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்குச் செல்லும் வாயிலில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களின் உடல் சோர்வடைந்த நிலையில் குறித்த இடத்துக்கு வைத்தியர் வரவழைக்கப்பட்டு உடல்நிலை தொடர்பில் பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதித்த வைத்தியர் குறித்த மீனவர்களின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதனால் சோர்வு ஏற்படுகிற நிலையில் நீரை அதிகளவு அருந்துமாறு கோரிக்கை விடுத்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி