இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் நான்கு பேர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு

போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து நேற்று (19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வருகைதந்த மாதகல் மீனவர்கள்,

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் இணைந்து, பேரணியாக யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மீனவர்கள் திடீரென யாழ் இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றதனால் உடன் அதிகமான பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் அவ் இடத்தை விட்டு அகன்று, மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி