உலகம் முழுவதும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மற்றும் கவுரவம் அளிக்கும் விருதுகளாக ஆஸ்கார்

விருதுகள் அறியப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96Mவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து 2-வது முறையாக காமெடி நடிகரான ஜிம்மி கிம்மெல் வழங்குகிறார். இந்த விருது வழங்கும் விழாவில், எம்மா ஸ்டோன், ரியான் கோஸ்லிங், ராபர்ட் டி நிரோ, பிராட்லி கூப்பர் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

இதில், புவர் திங்ஸ் என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இதனை பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா வழங்குவதற்காக மேடையில் தோன்றினார்.

அவர் வருவதற்கு முன் நிகழ்ச்சி தொகுப்பாளரான கிம்மல் பார்வையாளர்களை நோக்கி, நிர்வாண மனிதர் ஒருவர் மேடையில் இன்று ஓடி சென்றால் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது பைத்தியக்காரத்தனம்போல் இருக்காது? என கேட்டார்.

கிம்மல் அப்படி கேட்டதும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை எழுந்தது. அப்போது, மேடையின் ஓரத்தில் இருந்து ஜான் சீனா தலையை எட்டி பார்க்கிறார். பின்னர் அவர், நிர்வாண நிலையில் மேடையில் மெல்ல நடந்து வருகிறார். எனினும், அந்தரங்க பாகங்களை மறைத்தபடி மேடையில் மைக் முன்னே நின்று பேசினார்.

அவர் கிம்மலிடம், என்னுடைய எண்ணங்களை நான் மாற்றி கொண்டேன். மேடையில் நிர்வாண நிலையில் ஓடும் செயலை செய்ய விரும்பவில்லை. அது சரியாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. இது ஓர் அழகான நிகழ்ச்சி. சிரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல என்று பேசினார்.

இதனை கேட்டு பார்வையாளர்கள் சிரிப்பலை எழுந்தது. ஆஸ்கார் விருதுக்கு இந்த ஆண்டு 8 பிரிவுகளுக்கு பார்பி படம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. பார்பி படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜான் சீனா நடித்திருக்கிறார். இந்த விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதுக்கான பெயர் அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொண்டாட்டங்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் ஆகியவை தொடங்கின.

எனினும், இலங்கை நேரப்படி இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை முதல் இதனை நேரலையாக காணமுடிந்தது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அதிகாலை 4 மணி முதல் லைவாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த முறை இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை. கடந்த 2023-ம் ஆண்டில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த படம் 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவற்றில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் பிரிவுகளும் அடங்கும். இதுதவிர, பார்பி, புவர் திங்ஸ், கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் ஆகிய படங்களும் பரிந்துரை பட வரிசையில் இடம் பெற்றுள்ளன.

96ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஏழு விருதுகளை ‘ஒப்பன்ஹெய்மர்” திரைப்படம் குவித்துள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் ‘ஒப்பன்ஹெய்மர்’. அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையைக் கதைக்களமாக கொண்டு உருவான இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானியான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமர் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்திருந்தார்.

“அயர்ன்மேன்” புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ரூ.820 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.8 ஆயிரம் கோடியை வசூலித்தது.

ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளில் ஐந்து விருதுகளை வென்று ‘ஒப்பன்ஹெய்மர்” ஆதிக்கம் செலுத்தியது. இதனையடுத்து ஆஸ்கர் விருதுகளில் அதிக விருதுகளை ‘ஒப்பன்ஹெய்மர்” வெல்லும் என்று கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.

முழு பட்டியல் வருமாறு,

சிறந்த படம்: ஒப்பன்ஹெய்மர்

சிறந்த நடிகர்: சிலியன் மர்ஃபி (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)

சிறந்த உறுதுணை நடிகர்: ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த உறுதுணை நடிகை: டாவின் ஜாய் ராண்டால்ஃப் (தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி பாய் அண்ட் தி ஹெரான்

சிறந்த தழுவல் திரைக்கதை: அமெரிக்கன் ஃபிக்‌ஷன்

சிறந்த அசல் திரைக்கதை: அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த ஒளிப்பதிவு: ஒப்பன்ஹெய்மர்

சிறந்த ஆடை வடிவமைப்பு: நெப்போலியன்

சிறந்த ஆவணப்படம்: 20 டேஸ் இன் மரியுபோல்

சிறந்த ஆவணக் குறும்படம்: தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்

சிறந்த எடிட்டிங்: ஒபன்ஹெய்மர்

சிறந்த சர்வதேச திரைப்படம்: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம்: புவர் திங்ஸ்

சிறந்த ஒரிஜினல் இசை: இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி

சிறந்த ஒரிஜினல் பாடல்: வாட் வாஸ் ஐ மேட் ஃபார்? (பார்பி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: புவர் திங்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: வார் இஸ் ஓவர்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்: தி ஒண்டர்ஃபுல் ஸ்டோரி ஆஃப் ஹென்றி சுகர்

சிறந்த ஒலி: தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: காட்ஜில்லா மைனஸ் ஒன்

 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி