காலி - எல்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

நிலையில், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தல்கஹவத்த, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி கரந்தெனிய பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளதாகவும், தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது,

சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சிறுமியை கடத்திச் சென்ற சந்தேகநபர் இக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும், அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாணயக்கார மாவத்தைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் குறித்த சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவியின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி