“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, நெட்ஃபிக்ஸ் திரைப்படம்

ஒன்றை தயாரிக்கும் திட்டம் இருப்பதாக, கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகர் எரந்த கினிகே தெரிவித்துள்ளார்.

இதற்கான திரைக்கதை, ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதென்று, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்

அந்த வீடியோ கீழே பதிவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு, நேற்று (07) முற்றாக விற்றுத் தீர்ந்ததாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்தார்.

சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தமது புத்தகக் கடைகளில் இருந்து புத்தகத்தை வாங்கியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் பிரதான விநியோகஸ்தர் தமது நிறுவனம் எனத் தெரிவித்த விஜித யாப்பா, மேலும் ஒரு தொகுதி அச்சிடப்பட்ட புத்தகங்களை விநியோகிப்பதற்காக இன்று (08) கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நூலை வாங்குவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

“புத்தகத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக விற்பனையாகிறது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி