முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து நூல் ஒன்றை

வெளியிடவுள்ளார்.

“என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றிய சதி” என்ற பெயரில் அமைந்துள்ள இந்த நூல், மார்ச் 7, 2024 வியாழனன்று வெளியிடப்படுமென்று, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள், என்னைப் பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன.

“உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது. இலங்கை சுதந்திரம் பெற்றது முதலான 60 வருடங்களில், இந்த நிலை காணப்படவில்லை.

என்னை பதவியிலிருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்தது. 2022இல் இடம்பெற்ற சம்பவங்களால், நாட்டின் எதிர்காலத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை, எனது நூல் கொண்டுள்ளது” என, அவர் தெரிவித்துள்ளார்.

WhatsApp_Image_2024-03-06_at_1.54.56_PM.jpeg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி