ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு நாட்டில் மனித உரிமைகள் தொடர்பான அண்மைக்கால

சட்ட அபிவிருத்திகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான இந்த முக்கிய குழுவின் சார்பாக ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையத் தகவல்தொடர்பு தொடர்பான சட்டம், கிட்டத்தட்ட அனைத்து வகையான வெளிப்பாடுகளையும் குற்றமாக்கலாம், இது கருத்து சுதந்திரத்தின் மீது குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் கடமைகள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் இந்தச்சட்டத்தை சீரமைக்கும் வகையில் திருத்தங்களைச் செய்யுமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக இலங்கையின் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டக் கைதிகளை விடுதலை செய்வதை ஊக்குவித்தல் மற்றும் இலங்கை தடைக்காலத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முக்கிய குழு சார்பில் ரீட்டா பிரெஞ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் குடியுரிமை தொடர்பான பல முக்கியமான சட்ட வளர்ச்சிகள் உள்ளன. எனினும் துரதிர்ஷ்டவசமாக, சில ஏற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.

உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை கவனிக்கும் அதேவேளையில், எந்தவொரு சட்டத்திற்கும் முன்னதாக நம்பிக்கையை உருவாக்குவதற்கு உள்ளடக்கிய பங்கேற்பு செயல்முறையின் முக்கியத்துவத்தை தமது குழு வலியுறுத்துவதாக ரீட்டா குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு எதிர்கால ஆணைக்குழுவும் சுயாதீனமாகவும், உள்ளடக்கியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், முந்தைய நிலைமாறுகால நீதிச் செயல்முறைகளைக் கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதைகளை வழங்க வேண்டும்.

காணி விடுவிப்பு தொடர்பான அரசாங்கத்தின் உறுதிமொழிகளை தாம் வரவேற்கும் நிலையில், ஆனால் வடக்கு மற்றும் குறிப்பாக நாட்டின் கிழக்கில் காணி அபகரிப்புகளில் அதிகரித்த பதற்றங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன.

எனவே சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுமாறு ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி