போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில்

விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (03) பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டினார்.

அத்துடன், பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசலை அண்டி நடத்தப்படும் போரா மாநாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த 4 வருடங்களாக போரா சமூகத்தினர் ஆற்றிய சமய சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய புத்தகமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

போரா சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

bora.jpg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி