தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க, வடக்குக்கு விஜயம்

மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சிக்கு முதலில் விஜயம் செய்யும் அவர், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மக்கள் சந்திப்பில் பங்கேற்கவுள்ளதோடு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பிற்பகலுக்குப் பின்னர் வவுனியாவில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் அவர் பங்கேற்கவுள்ளதோடு அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொள்வுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள அவர், இரண்டு நாட்கள் தங்கியிருந்து பொதுமக்கள் சந்திப்பில் பங்கேற்றுஇ தொடர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

குறிப்பாக, இலங்கை தமிழஅரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு தற்போது ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி