நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழ்

முற்போக்கு கூட்டணியின் அலுவலகத்தில், நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் மனிதநேய கூட்டணியை அமைப்பது தொடர்பாக நாம் கடந்த வாரம் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம்.

இது தொடர்பாக நாம் பல அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். அவர்கள் தமது இணக்கப்பாட்டை தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

“அந்தவகையில் நாம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்திருந்தோம். நாட்டை நெருக்கடியில் இருந்து விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடினோம்” என பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, “நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணி சார்பில் வெளியிடப்பட்ட அரசியல், சமூக பார்வை தொடர்பான ஆவணங்களை அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தங்களிடம் கையளித்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி