குருந்தூர் மலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. குருந்தூர்மலை தொடர்பான

வழக்கு ஒன்று இன்றையதினம் (29) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்று 25ஆம் திகதி ஜூலை 2024 அன்று வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது, குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022.09.21 குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ku_2.jpeg

 

ku_1.jpeg

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி