புதிய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில்

இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன ஓய்வுபெற்ற பின்னர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி, அப்போது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, அவர் இதுவரை அந்த பதவியை ஆற்றி வந்தார். கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான தேசபந்து தென்னகோன் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இலங்கை பொலிஸில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி