இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தண்டனை அனுபவித்து

வந்த நிலையில் இந்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கைத் தமிழரான சாந்தன் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதன் பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தனும் தங்கவைக்கப்பட்டார். இந்நிலையில், தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார். சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்திய மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த போதும்ஈ அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணமடைந்துள்ளார் என்று, இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி