மொட்டு கட்சியை பாதுகாப்பதைக் கைவிட்டால் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி

தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்றைய தினம் (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார,

ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளும் தமது கட்சியின் கட்சியின் கொள்கைகளும் ஒன்றே. ஆனால் மொட்டுவை பாதுகாப்பதால் அவருடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது எனவும் அந்த பாதையை கைவிட்டால் அவருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும், அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது எனவும், நளின் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்தகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம்.

“ஜனாதிபதி முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும். இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

“இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும்.

“இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை ஒரு நாள் கூட நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி  முறைமையை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரினால் அதனை தோற்கடிப்பதற்கும், சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின் கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை சூனியமாகிவிட்டது. எனவே இதனைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது.

“நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி