மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கிலான “உரித்து” தேசிய வேலைத்திட்டத்துக்கு

விண்ணப்பிப்பதற்கு துரித தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 1908 என்ற துரித தொலைபேசி ஊடாக நாளாந்தம் காலை 8.30 முதல் இரவு 8.30 வரை ஜனாதிபதி அலுவலகத்தின் உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகத்தை தொடர்புகொள்ள முடியுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், www.tinyurl.com/urumaya ஊடாக டிஜிட்டல் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் அல்லது கொடுப்பனவுப் பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளின் உரித்தினை நிபந்தனைகளின்றி முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த “உரித்து” நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய பெறுமதி கிடைப்பதுடன்,

குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் விவசாயிகள் அதன் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி