பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கணினி

ஹெக்கர்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இணையத்தைப் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு உத்திகள் பின்பற்றப்படுகின்றன.

ஆனால் சில அரச மற்றும் தனியார் இணையதளங்கள் மூன்றாம் தரப்பினருக்கு மிக எளிதாகத் தகவல்களைப் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளன.

முகநூல், வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் போன்ற முக்கியமான தரவுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட கணக்குகள், கணினி ஹெக்கர்களால் திருடப்படலாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இணையத்தளத்தில் சிலரின் தனிப்பட்ட தரவுகளை உள்ளிடுவது அவசியமானால் இதற்கு பொறுப்பானவர்கள் அந்த இணையத்தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்குப் பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும் எனவும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.  

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி