இலங்கை இராணுவத்தின் 54ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே, இன்று

(23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்து இணைந்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்ட இவர் 'ஊழல் எதிர்ப்புக் கொள்கை மற்றும் நடைமுறைப்படுத்தல் பிரிவின் பிரதானியாகவும்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினது ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டார்.

இராணுவத் தளபதியாக பணியாற்றுவதற்கு முன்னர் இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்புப் படையின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் தனது பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்த அவர், பாடசாலை நாட்களில் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்

1984ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் கடட் அதிகாரியாக இணைந்த அவர், தியத்தலாவ இராணுவக் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்ற பின்னர், 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஆயுதப்படையில் இரண்டாம் லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி