ராஜபக்ஷ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை விமர்சித்த காரணத்தினாலேயே தான் மின்சக்தி அமைச்சுப் பதவியில் இருந்த

விலக்கப்பட்டதாக சம்பிக ரணவக்க எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2010 ஆம் ஆண்டு ஆரம்பமான ராஜபக்ச ஆட்சியின் இரண்டாம் தவணையின் பின்னர் நாட்டின் வருமானம் ஈட்டும் வழிகள் வீழ்ச்சியடைந்தது.

அதற்குப் பதிலாக ஊழல் மற்றும் மோசடிகள் அதிகரித்தது. அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில், பொருளாதார வீழ்ச்சி குறித்து "அல பாலு ஆர்த்திகய" என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதி வௌியிட்டேன்.

அதன்மூலம் அன்றைய அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்த முயற்சித்தேன். அதற்கான பரிசாக, 2012வரை எனது வசம் இருந்த மின்சக்தி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

வேறு அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டேன் மோசடி, ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக அப்போதைய ராஜபக்ச அரசாங்கம் செயற்படவில்லை. அன்றைக்கு நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாகவே இந்நாட்டில் இன்று பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அன்றைய ராஜபக்ஷ ஆட்சியே பிரதான காரணம் என தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி