வீடொன்றில் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வரும்போதே, யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி யாழ். 

பல்கலைக்கழக மாணவன் நேற்றுமுன்தினம் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்றுமுன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில்  நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடம் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய்   பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தில் சிக்கியவர் தான் இந்த இளைஞன் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதும், காயமடைந்த மற்றையவர் பின்னாலிருந்து சென்றதும், விபத்தின் போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த மாணவன் உட்பட சிலர் அதிகாலை 2.58 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 4 மணியளவில், வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைக்க முயன்று விட்டு திரும்பி வரும் போதே மாணவன் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் ஒருவரின் வீடு புகுந்து வீட்டு யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், ஹைஏஸ் வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்க முயன்றதாகவும், அப்போது வீட்டிலிருந்தவர்கள் வெளியே தப்பியோடியதாகவும் தெரியவருகின்றது.

அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்லும் போதே நீர்வேலி - சிறுப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தெரியவருகின்றது.

அவரது வயிற்றின் கீழ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்சர் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி பகுதி தாக்கியதால் அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்ற இளைஞன், காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியதாகவும் மோட்டார் சைக்கிளை தனது உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசாரால் சந்தேகிக்கப்படுகிறது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி