இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்ததன் மூலம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தேசத்துரோக குற்றத்தை இழைத்துள்ளார்

அது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என பிவித்துரு ஹெல உறும தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியா சென்று இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்திருந்தார். இது  இலங்கையின் இறைமை மற்றும் சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயலாகும்.

இது, அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அரசியலமைப்பின் படி எடுக்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறுவதாகும்.

இதன்படி அமைச்சர் ஹரீன் அமைச்சர் பதவியை வகிக்க தகுதியற்றவர். மறுபுறம், நமது நாட்டை வேறொரு நாட்டுடன் இணைப்பது தேசத்துரோகச் செயலாகும்.

தேசத்துரோகம் என்பது ஒரு அரசனுக்கு துரோகம் செய்வதல்ல. நமது தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகத்திற்கான தண்டனை மரணம். எளிமையாகச் சொல்வதானால், அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மரண தண்டனை வழங்கக் கூடிய குற்றத்தைச் செய்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி