இலங்கை இந்த வருடம் தேர்தல்களிற்கு முன்னதாக மீண்டும் புவிசார் அரசியல் ரீதியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள நிலையில்

இலங்கை குறித்து அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை மிகவும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்ற ஒரு தருணத்தில் வெளிசக்திகள் அழுத்தங்களை கொடுக்கின்றன. சீனாவின் அழுத்தம் குறிப்பிடத்தக்களவில் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென்கிழக்கு கரையில் உள்ள இலங்கை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பெரும் அரசியல் போட்டியில் சமீப காலங்களில் சிக்குண்டுள்ளது.

2015 முதல் 2019 வரை இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, தனது நாட்டு மக்களின் மிக மோசமான வறுமையை அதிகரிக்கும் பணவீக்கம், வீழ்ச்சியடைந்த பொருளாதாரம், எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றை எதிர்கொண்டு அதிலிருந்து மீள முயல்கின்றனர் என வோசிங்டன் டைம்ஸ் உடனான சந்திப்பின்போது தெரிவித்தார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஆழமான இருதரப்பு உறவுகளை ஏற்படுத்துவதையும் இலங்கைக்கான அமெரிக்காவின் அதிகளவு ஆதரவை பெற்றுக்கொள்வதையும் நோக்கமாக கொண்டே இந்த வாரம் தான் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை தற்போதைய நிலையிலிருந்து காப்பாற்றுமாறும் இணைந்து பணியாற்றுமாறும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை கேட்டுக்கொள்வதே தனது நோக்கத்தின் விஜயம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

2022இல் இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்தது முதல் சிறிய வர்த்தகங்களிற்கான கடன்கள் உட்பட இலங்கைக்கு 300 பில்லியன் டொலருக்கு மேற்பட்ட உதவியை பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும் 2009இல் முடிவிற்குவந்த ஈவிரக்கமற்ற உள்நாட்டு யுத்தத்திலிருந்து இன்னமும் மீண்டு வருகின்ற 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கையின் உதவி அரசியல்கள் மிகவும் குழப்பகரமானவை.

சீனாவின் பாரிய புதியபட்டுப்பாதை திட்டத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களில் இணைந்துகொள்வதால் ஒரு நாடு கடன் பொறியில் சிக்கப்படுவது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட விரும்புபவர்கள் இலங்கையின் அனுபவங்களை ஆராயலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

2017இல் இலங்கை சீனாவிற்கான 1.5 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த முடியாததால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்கவேண்டிய அழுத்தங்களிற்குள்ளானது என குறிப்பிட்டிருந்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி