முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 83 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமினி ஜயவிக்ரம பெரேராவின் பூதவுடல், குருநாகல் - கட்டுகம்பலவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சுகவீனமுற்றுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) காலை, கடுகம்பலையில் உள்ள அவரின்  இல்லத்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சரின் உடல்நலன் பற்றி விசாரித்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாடியிருந்தார்.

குடும்ப உறுப்பினர்களிடம் அமைச்சரின் உடல் நிலை பற்றிய தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி, காமினி ஜெயவிக்ரம பெரேராவின் வீட்டுக்கு அருகில் ஒன்றுகூடிய பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியிருந்தார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், காமினி ஜெயவிக்ரம பெரேராவின் புதல்வரும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசங்க ஜெயவிக்ரம, குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி