ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த இருவரும் இன்று (16) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

அவரைத் தொடர்ந்து கெஸ்பேவ மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான காமினி சில்வாவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்திற்கு 100 ஆவது கட்ட ஸ்மாரட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் வைபவத்தின் போதே இந்த இருவரும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது கட்சியை மேலும் வலுவடையச் செய்வதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Sajith_5.jpeg

 

Sajith_4.jpeg

 

Sajith_3.jpeg

 

Sajith_2.jpeg

 

Sajith_1.jpeg


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி