ஜெனிவா நகர்வுகள் குறித்து அங்குள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைப்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் தொடர்பில் மார்ச் மாதம் 4 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.

எவ்வாறாயினும் ஜெனிவா நகர்வுகள் குறித்து அங்குள்ள இலங்கை தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் சமகால மனித உரிமைகள் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் அடைந்துள்ள இலக்குகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை” என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில் இணையப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஆலோசனைகளை செவிமடுக்கவேண்டிய அவசியமில்லை.

அத்துடன், அவர்களின் செயற்பாடுகளின் மூலம் சாதகமான விளைவுகள் எதுவுமில்லை என்றும், அவர்களின் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிவில் சமூகத்தினர் சில சட்டங்களை மாற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ளதால் நாங்கள் எங்கள் சமூகத்தினருடன் மட்டுமே கலந்துரையாடுவோம்.

மாறாக சர்வதேச நிபுணர்களுடன் அல்ல எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி